அயல்நாடு வாழ் இந்தியர் (Non-resident Indian)
இந்தியாவில் பிறந்து வாழ்ந்துவரும் இந்திய குடிமகன் ஒருவர் தொழில் செய்யவோ, பணியாற்றவோ, பயிற்சிக்காகவோ வெளிநாடு சென்று காலவரையின்றி அங்கு இருந்துவரும் காலத்தில் அவரை அயல்நாடு வாழ் இந்தியர் (NRI) என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்காகவோ அல்லது மத்திய - மாநில அரசுகளின் பணிநிமித்தம் தொடர்பாகவோ, மத்திய - மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர் காலவரையற்ற(Non Temporary) பணியின் காரணமாகவோ வெளிநாட்டில் சென்று இருந்திடும் காலத்தில் அவர்களும் அயல்நாடு வாழ் இந்தியர் எனும் வரையறைக்குள் வருகின்றனர்.
இந்தியாவில் பிறந்து வேறொரு நாட்டின் குடிமகனாக(Persons of Indian Origin)இருந்தாலும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் பெறுகின்ற அதே நிலை அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Person of indian origin_ PIO (இந்திய வம்சாவளி நபர்)
மேலும் பயனுள்ள தகவல்கள்:
வெளிநாடுகளுக்கு செல்லும் ஒருவரின் அடையாளத்தையும், நாட்டையும் சான்று அளித்து ஒருநாட்டு அரசு வழங்கும் ஆவணம் கடவுசீட்டு ஆகும்.
Visa விசா
ஓர் குறிப்பிட்ட பகுதிக்கு (நாடு) ஒருவர் செல்வதையும் அல்லது அங்கிருந்து வெளியேறுவதையும் அனுமதிக்கும் ஆவணமாகும். சில நாடுகள் சிலருக்கு நுழைவிசைவு இன்றியே உள்ளே செல்ல அனுமதிக்கின்றன.
Person of indian origin_ PIO (இந்திய வம்சாவளி நபர்)
(Person of Indian origin, PIO) என்று வகைப்படுத்துகிறது. இவர்களுக்கு கடவுச்சீட்டை ஒத்த பிஐஓ அட்டை வழங்கப்படுகிறது. இந்திய அரசு வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும் அத்தகைய பெற்றோர்களுக்கு பிறந்தவர்களையும் இந்திய வம்சாவளி நபர்
நான்கு தலைமுறை முன்புவரை இந்தியாவில் குடியுரிமைப் பெற்றிருந்த முன்னோர்களைக் கொண்டிருந்த நபர்களும் அவர்களது வாழ்க்கைத்துணையும் இந்த அட்டை பெறத் தகுதி பெற்றவராவர்.
இந்த அட்டை உள்ளவர்களுக்கு நுழைவிசைவு (விசா) மற்றும் பணியுரிமம் வழங்குவதில் மற்ற வெளிநாட்டினருக்கு உள்ளதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்காது.
0 comments
கருத்துரையிடுக