மத்தியகிழக்கு நாடுகளில் சவூதிஅரேபியா, ஈராக்கிற்கு அடுத்தப்படியாக பெட்ரோல் அதிக உற்பத்தி செய்யும் நாடு குவைத். இதன் தெற்கில் சவூதிஅரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லையாக அமைந்துள்ளது.
குவைத் நாட்டை தவ்ளத் - அல் - குவைத் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு செல்வம் நிறைந்த கோட்டை என்று அர்த்தம்.
குவைத் நாட்டு நாணயத்தின் பெயர் தினார் ஆகும். ஒரு தினார் என்பது 1000 ஃபில்சுகளாகும். இது உலகின் அதிக மதிப்புடைய நாணயம் ஆகும். ரூபாய்க்கு மாற்றாக 1961ம் ஆண்டு தினார் அறிமுகப்படுத்தப்பட்டது.
குவைத் நாட்டின் மக்கள் தொகை 35லட்சம் ஆகும். இவர்களின் சுமார் 20 லட்சம் பேர் வெளிநாட்டினர். இந்நாட்டின் ஆட்சிமொழி அரபு மொழியாகும்.
குவைத் நாட்டின் தலைநகரம் குவைத் நகரம் (Kuwait City) ஆகும். அரபுமொழியில் மதினத்துள் குவைத் என அழைப்பர். ஆங்கிலத்தில் Persian sea என அழைக்கப்படும் பாரசீக வளைகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.
1961 - ஜூன் 19 குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் (இங்கிலாந்து) இருந்து விடுதலையை அறிவித்தது.
மத்தியகிழக்கு நாடுகளிலேயே வழுவான பாராளுமன்றம் கொண்ட நாடு குவைத்தாகும். இதன் பெயர் மஜ்லிஸ் அல் உம்மா ஆகும். இந்நாட்டின் அரசு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். குவைத்தின் அமீராக சபாஅல் அஹமது அல்ஜாபர் அல்சபா 2006ல் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.
இந்நாட்டின் மொத்த வருவாயில் 95 சதவிகிதம் எண்ணெய்யின் மூலமே கிடைக்கிறது.
2011-12 ஆம் ஆண்டு 47 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி பட்ஜெட்டில் சாதனை செய்தது.
குவைத் அதன் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக சுத்திகரிப்பு செய்கிறது.
குவைத் நாட்டின் காலநிலை விவசாயத்திற்கு ஏற்றது அல்ல. அது தனது உணவு தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.