குவைத் உயிரியல் பூங்கா உமேரியா என்ற இடத்தில் உள்ளது. இது குவைத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் உயிரியல் பூங்கா. இது குவைத்தில் உள்ள விலங்குகளின் பாதுகாப்பு மையமாகவும் உள்ளது. மேலும் குவைத்தில் அழிந்துவரும் இனங்கள் இங்கு இனப்பெருக்கமும் செய்யப்படுகிறது.
சுமார் 990 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்காவில் 65க்கும் மேற்ப்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனங்கள் உள்ளன.
குவைத்தில் குடும்ப சுற்றுலா செல்ல சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஓர் மகிழ்ச்சியான இடமாகவும் உள்ளது.
வேலி தடுப்பில் இருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி... போன்ற விலங்குகளை அருகில் இருந்து கண்டு ரசிக்கலாம். வேலி தடுப்பிற்கு பின்னால் உள்ள உயிரினங்களுக்கு புற்களை ஊட்டலாம்.
வேலி தடுப்பில் இருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி... போன்ற விலங்குகளை அருகில் இருந்து கண்டு ரசிக்கலாம். வேலி தடுப்பிற்கு பின்னால் உள்ள உயிரினங்களுக்கு புற்களை ஊட்டலாம்.
மேலும் பூங்காவில் உள்ள ஒட்டகத்தின் மீது ஏறி சவாரி செய்யலாம். பூங்காவில் உள்ள ரயிலில் பயணம் செய்து பூங்காவை சுற்றிப் பார்க்கலாம். விலங்குகளின் பிண்னணியில் வேண்டுமான அளவு புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்..
இதற்கு நுழைவு கட்டணமாக நபர் ஒருவருக்கு ஒரு தினார் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை தினங்களில் 500பில்சுகள் மட்டும் தான்.
பார்வையாளர் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை.
0 comments
கருத்துரையிடுக