திங்கள், 20 ஜனவரி, 2014

குவைத்தில் இந்தியர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்கான நடைமுறைகள் என்னென்ன?♥♥♥

திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் வாழ்கை ஒப்பந்தமே திருமணம் ஆகும்.

1969ம் ஆண்டு வெளிநாட்டு திருமணச் சட்டப்படி குவைத்தில் இந்தியர் ஒருவர் திருமணம் செய்துக் கொள்ள முடியும்.

திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகனும் ♥ மணமகளும் இந்திய தூதரக அலுவலருக்கு முன்பாக, ரெசிடென்ஸ் விசாக்கள் வைத்துள்ள மூன்று சாட்சிகளோடு நேரில் தோன்ற வேண்டும்.

"செய்து கொள்ளப் போகும் திருமணத்தின் அறிவிப்பு" (Notice of intended marriage) என்று தலைப்பிட்ட உரிய படிவத்தை நிரப்பி

*தம்பதிகள் தங்களின் 4 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள்,
* தம்பதிகளின் பாஸ்போர்ட் நகல் மற்றும் அடையாள அட்டை நகல்,
* சாட்சிகளின் பாஸ்போர்ட் நகல் மற்றும் அடையாள அட்டை நகல்

(உதாரணமாக மணமகள் இலங்கை நாட்டை சேர்ந்தவர் எனில், திருமணம் செய்வதை அவர்களின் உரியநாடு (இலங்கை) தடுக்கவில்லை என்பதை சொல்லி, அவர்களின் தூதரகத்தில் இருந்து ஒருசான்று (No Objection form) பெற்று அதையும் இணைக்க வேண்டும்.)

போன்றவைகளுடன் கட்டணமாக15 தினார் சமர்பிக்க வேண்டும்.

திருமண அறிவிப்பை அலுவலரிடம் சமர்பிக்கும் நேரத்தில் அசல் பாஸ்போர்ட்களை கையில் வைத்திருப்பது அவசியம்.

பிறகு செய்திதாளில் திருமண அறிவிப்பைப் பிரசுரிப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட வடிவ அமைப்பு கொடுக்கப்படும். பின்னர் செய்தி தாள்களில் பிரசுரிக்க வேண்டும்.

(பூர்த்தி செய்த படிவத்தின் நகலை உரிய பெற்றோர்களுக்கு தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது. இது செய்து கொள்ள போகும் திருமண அறிவிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.)

தம்பதிகள் தங்களின் சொந்த நாட்டில் நிரந்தர முகவரி உள்ள இடத்திலும், தாங்கள் தங்கி பணிபுரியும் குவைத்திலும் பரவலாக படிக்கப்படுகிற செய்தி தாளிலும் பிரசுரிக்க வேண்டும்.

பிரசுரித்ததற்கு பிறகு, அந்த தம்பதியினர் 30நாட்கள் கட்டாயம் காத்திருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட காலத்தில் யாரிடமிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படாத பட்சத்தில், திருமணம் செய்து கொள்வதற்கான தேதி வழங்கப்படுகிறது.

(அந்த விளம்பரத்தை பிரசுரித்ததற்குப் பிறகு எந்தவொரு நாளிலும், திருமணத்தை நடத்துவதற்கான தேதியை குறித்துக் கொள்வதற்காகவும், திருமணம் செய்து கொள்ளபோகும் தம்பதியினர் தூதரகத்தை தொடர்புக் கொள்ளலாம்.)

அறிவிப்பை பிரசுரித்த பிறகு, அந்த குறிப்பிட்ட செய்தி தாள்களை (அறிவிப்பு வெளியான முழுபக்கமும்) தம்பதியினர் தூதரகத்தில் சமர்பிக்க வேண்டும்.

திருமணம் செய்துக் கொள்ளும் முந்தைய நாளன்று தம்பதிகளும், சாட்சிகளும் அசல் பாஸ்போர்ட்களை திருமண அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.

திட்டமிட்ட திருமண நாளன்று தம்பதிகளுடன், 3 சாட்சிகளும் தூதரகத்திற்கு கையொப்பமிட வரவேண்டும்.

திருமணம் நடந்தவுடன் திருமண சான்றோடு சேர்த்து பாஸ்போர்ட்கள் திருப்பிக் கொடுக்கப்படும். இதற்கு சேவை கட்டணமாக 13 தினார்கள் செலுத்த வேண்டும்.

0 comments

கருத்துரையிடுக