வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

குவைத் - விடுதலை கோபுரம் (லிபரெஷன் டவர்)

லிபரெஷன் டவர் என அழைக்கப்படும் விடுதலை கோபுரம் குவைத் நாட்டின் இரண்டாவது உயரமான கட்டிடமாகும்.  குவைத் நகரத்தில் விடுதலை கோபுரம் ஆகஸ்டு 2, 1990ம் ஆண்டு ஈராக் படையெடுப்பிற்கு முன்பு தொடங்கப்பட்டது.

அப்போது குவைத் தொலைத் தொடர்பு கோபுரம் என அழைக்கபட்டு வந்தது. சதாம் உசேனின் தலைமையிலான ஈராக் படை குவைத் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டதால் கட்டிடப் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

சதாமின்  படைகள் பிப்ரவரி 27, 1991ல் அமெரிக்க தலைமையிலான கூட்டுபடைகளால் வெளியேற்றப்பட்ட பின் சேதமடைந்த
கட்டிடம் மீண்டும் தொடங்கியது. 

1993ல் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம், குவைத் ஈராக்கிடம் இருந்து விடுதலை பெற்றதை அடையாளப்படுத்தும் விதமாக விடுதலைக் கோபுரம் (Liberation Tower ) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

372 மீட்டர் (1220 அடி) உயரம் கொண்ட இந்த விடுதலை கோபுரத்தில் சுழலும் உணவகம், வானொலி மற்றும் பிற தொலைத் தொடர்பு அலுவலகங்கள் உள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ள விடுதலை கோபுரம் ஒருசில தினங்களில் மட்டுமே பார்வைக்காக திறக்கப்படுகிறது.

படக்காட்சி:








0 comments

கருத்துரையிடுக