திங்கள், 24 பிப்ரவரி, 2014

குவைத் ஆட்சியாளர்கள் : அன்றிலிருந்து இன்று வரை....

குவைத் 1718 ல் இருந்து   இதுவரை 15 ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளது.  அல்சபா வம்சாவளியினர் மட்டுமே அடுத்தடுத்து குவைத்தில் அரியணையில் அமர்ந்து வருகின்றனர்.


  • முதலாம் சேக் சபா 1718-1776

  • சேக் அப்துல்லா 1776-1814

  • சேக் சபா ஜாபர் 1814-1859

  • சேக் சபா நான்காம் 1859-1866

  • சேக் அப்துல்லா ஐந்தாம் 1866-1893

  • சேக் முஹம்மது பின் சபா 1893-1896




சேக் முபாரக் அல் சபா 1896-1915
சேக் ஜாபர் முபாரக் அல் சபா 1915-1917
சேக் சலீம் முபாரக் அல் சபா 1917-1921
சேக் அஹமது அல் ஜாபர் அல் சபா 1921-1950
சேக் அப்துல்லா அல் சலீம் அல் சபா 1950-1965
சேக் சபாஅல் சலீம் அல் சபா 1965-1977
சேக் ஜாபர் அல் அஹமது அல் ஜாபர் அல் சபா 1977-2006
சேக் சாத் அல் அப்துல்லா அல் சலீம் அல் சபா
(ஜனவரி 15-29, 2006)
சேக் சபா அல் அஹமது அல் ஜாபர் அல் சபா
(ஜனவரி 29, 2006 இருந்து தற்போது வரை)

தற்போது மன்னராக இருக்கும் சேக் சபா அல் அஹமது அல் ஜாபர் அல் சபா 1929ம் ஆண்டு ஜனவரி 16ம் நாள் குவைத்தில் சமூக அந்தஸ்து உள்ள குடும்பத்தில் பிறந்தார்.

இவர் குவைத்தின் பத்தாவது மன்னரான சேக் அஹமது அல் ஜாபர் அல் சபாவின் நான்காவது மகனாவார். தற்போது மன்னருக்கு 85 வயதாகிறது.

இவர் உலகில் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வெளியுறவுத்துறை மந்திரியாக சேவை புரிந்துள்ளார்.

இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் மனைவி ஷைஹா பிதூன் 1990 ஈராக் படையெடுப்பிற்கு முன்பே இறந்துவிட்டார்.

இவரின் மகன்களில் ஒருவரான சேக் நாசர் நீதித்துறை திவானாக உள்ளார். மற்றொரு மகன் சேக் ஹமீதும் இறந்துவிட்டார். மூன்றாவது மகன் சேக் அஹமது 1969ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார்.

இவரது மகள் ஷைஹா சாவ்லா மார்பக புற்றுநோய் காரணமாக 2002ம் ஆண்டு இறந்துவிட்டார்.

ஆங்கிலம் மற்றும் அரபியில் புலமை பெற்ற மன்னருக்கு மீன் பிடித்தலும், வேட்டை ஆடுவதும் பொழுது போக்காகும்.

மேற்க்கோள்:

http://www.pm.gov.kw/en/state_Of_Kuwait/rulersOfTheKuwait.jsp

0 comments

கருத்துரையிடுக