புதன், 16 ஜூலை, 2014

குவைத் தமிழர்கள் தயாரித்த திரைப்படம்..!

தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனர். மத்தியகிழக்கு நாடான குவைத்திலும் தமிழ் திரைப்படங்களுக்கு நெருக்கமான பார்வையாளர் வட்டம் உள்ளது. இங்குள்ள தமிழர்கள் திரைப்படங்களை விரும்பிபார்பதால் புதிய படங்களும் இங்கு உடனுக்குடன் வௌியாகிறது.

குவைத் தமிழர்களும் தமிழ் திரைப்படத்துறையில் முத்திரை பதிக்கும் வகையில் "இருக்கு ஆனா இல்ல" என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது குவைத் தமிழர்களால்  பெரிய பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட முழுநீள திரைப்படமாகும்.

தமிழகத்தை சேர்ந்த சத்யா நாகராஜ், செல்லதுரை, வெங்கட், பாலாமணி  ஜெயபாலன் ஆகியோர் குவைத்தில் வசித்து வருகின்றனர். தமிழ்
திரைப்படங்களை தயாரிப்பதற்காக வரம் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.


இந்நிறுவனம் தயாரித்த இருக்கு ஆனா இல்ல என்ற முதல் திரைப்படத்தை சரவணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு சமீர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். 

திரைப்படத்தை அஹமது என்பவர் தொகுத்துள்ளார்.
குவைத்வாழ் தமிழரான செங்கை நிலவன் கார்கால மேகம் என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். காதலை மையமாக வைத்து எடுத்துள்ள இத்திரைப்படத்தில் முற்றிலும் புதுமுக நடிகர்களாவர்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீடு குவைத்தில் கடந்த நவம்பர் 22 (2013) அன்று வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் பாரி வேந்தரின் தலைமையில் நடைப்பெற்றது.

சென்னையில்  முழுபடப்பிடிப்பையும் முடிக்கப்பட்டு ஜூலை 18 அன்று வெளியீட்டிற்காக தயாராக உள்ளது.

0 comments

கருத்துரையிடுக