இது....
ஏழு லட்சம் இந்தியர்களின்
தினப் போராட்டம் - தினார் போராட்டம்!
தினம் - அனுதினம் தினாருக்காக....
இதயம் கழற்றி ஈராண்டுகள் இங்கே
இதயம் பொருந்தி இருமாதங்கள் அங்கே
கொளுத்தும் வெயில் - கொட்டும் வியர்வை
கொட்டும் குளிர் - நடுங்கும் நரம்புகள்
சுழற்றும் சூறாவளி - கலங்கும் கண்கள்
சுகமென்க சகலமும் தினாருக்காக!
நீடுழி வாழ்கவென....
விரல் பிடித்து விமானம் ஏற்றிய தாய்
விதியின் தீர்ப்பில் விரைவில் குற்றவாளியாக!
நான் பெட்டியோடு பயணிக்கும் முன்பே
சவப்பெட்டியோடு பயணித்த என் தாய்!
சமரசம் செய்து கொள்க.... தினாருக்காக!
மாதத்தில் நாலுமுறை....
மனைவியோடு இல்வாழ்க்கை....
மழலையின் முத்த சத்தம் - கொலுசு சத்தம்....
கிரஹாம் பெல் கண்டுபிடித்த
கிர்...கிர்... மணி ஓசையில்....
அப்பா வந்து விடு,
நைனா நூரா, நூவே காவாலி,
பாப்பு ஆஜோ, ஜல்தி ஆஜோ,
டாடி வென் யூ கம் .... என
ஏக்கதோடு வளரும்
எங்கள் குழந்தைகள்....
''அப்துல் கலாம் '' கண்ட கனவு
''2020'' ல் எனது இந்தியா வல்லரசு...!
நிறைவேற்றிவிடு எங்களின்
நியாயமான கோரிக்கையை...!
அடுத்த தலைமுறைக்கும் வேண்டாம்
அவஸ்தையான இந்த தினார் போராட்டம்.
உணர்வாக்கம்:
பாரூக் பாரஜ். ஹவல்லி, குவைத்
0 comments
கருத்துரையிடுக