வியாழன், 2 ஜனவரி, 2014

தமிழ் பரப்பும் இதழ்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் ப
ணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு இடையே செய்திகளை அறியவும், தகவல்களை பகிரவும் தமிழை வளர்க்கும் விதமாக ஒரு மாதஇதழ் வெளிவருகின்றது.

பெண்கள் பகுதி, சிறுவர், ஆன்மீகம், விளையாட்டு, கவிதை என்று பல்சுவை இதழாக 'வசந்தம்' என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

வசந்தம் இதழின் ஆசிரியர் அப்துல் முஸவ்வீர்  சென்னையை சார்ந்தவர். குவைத் நாட்டில் இஸ்லாமையும், அதன் கலாச்சாரம், பண்பாடுகளை
மக்களிடையே அறிமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய நிலையம் (IPC) இந்த இதழை வெளியிடுகிறது.

இலவசமாக வழங்கப்படும் இந்த வசந்தம் இதழ் மாதம் மாதம் பத்தாயிரம் பிரதிகளை அச்சடிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

கருத்துரையிடுக