வியாழன், 9 ஜனவரி, 2014

குவைத் இந்திய தூதரக வரலாறு

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம்
தூதரகம் என்பது மற்றொரு நாட்டின் உறவை வெளிப்படுத்தும் வண்ணம், அந்நாட்டின் தலைநகரத்தில்  தூதுவரின் தலைமையில் இயங்கும் அலுவலகம் ஆகும்.

முதன் முதலில் 1962 ம் ஆண்டிலிருந்து குவைத்திற்கான இந்திய தூதரகம் செயல்படுகிறது. முதல் அலுவலகம் தஸ்மாவில் உள்ள பதர்முல்லா பூங்கா அருகில் அமைந்திருந்தது.

பிறகு 1975ம் ஆண்டு இந்திய தூரகத்தின் அலுவலகம் எண் 34 இஸ்திக்லால் தெரு, பினைதல் கர்க்கு
சென்றது. இது 1992 ம் ஆண்டு ஆகஸ்டு வரை சுமார் 17 ஆண்டுகள் அங்குதான் செயல்ப்பட்டது. பிறகு தற்போதைய முகவரிக்கு மாற்றப்பட்டது.

தற்போது உள்ள இந்திய தூதரகம் 4000 ஆயிரம் சதுரஅடியில் 1988ம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது.

கட்டுமானம் 1990-91 ல் முடிக்கப்பட்டு 1992 அக்டோபர் இருந்து கடந்த 21 ஆண்டுகளாக தற்போதைய முகவரியில் செயல்ப்பட்டு வருகிறது.

Address: Diplomatic Enclave, Arabian Gulf Street, P.O. Box 1450, Safat-13015, Kuwait.

தூதரகம் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைசுவர் போன்றவற்றை இந்தியாவின் ஆக்ராவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. இதன் வடிவமைப்பு டெல்லியில் உள்ள செங்கோட்டையை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.