ஞாயிறு, 5 அக்டோபர், 2014

குவைத்தில் பணி புரிவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

1. பொறியியல் படித்தவர்கள் அமெரிக்காவிற்கும், எம்.பி.ஏ போன்ற படிப்பினை படித்தவர்கள் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விடுவதால், இரண்டாம் வகுப்புக் கூடத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு குவைத்தில் வேலை பிரகாசமாக உள்ளது.

2. நம் மக்களில் ஐம்பதிலிருந்து எழுபது சதவீத வரை மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்களுக்கு இது பாலைவனமல்ல..? சோலைவனம்...!

3. தொழிற்படிப்பும், 5 முதல் பத்தாண்டுகள் வரை முறையான அனுபவம்
இருப்பின் சுமார் ஒன்றரை லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.

4. இங்கு சம்பாதிக்கும் பணத்திற்கு வருமான வரி செலுத்த தேவையில்லை.

5. பெண்கள் கருப்பு அங்கி (பர்தா) அணிய வேண்டிய அவசியமில்லை.

6. இந்தியாவின் பாரம்பரிய உடையான பட்டு, நவீன நாகரீக உடை அணிந்து வலம்வர தடையில்லை.

7. சவூதி அரேபியாவை போல் இல்லாமல் பெண்களும் வேலைக்கு போகலாம், கார் ஓட்டலாம்.

8. நீங்கள் சூதாட்ட பிரியர் எனில் அதனின்று விடுபட நல்ல சந்தர்ப்பம்.

9. இங்கு நீங்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் குடியுரிமை கிடைக்காது. ஆகவே பக்குவப்பட்ட மனதுடனும், பணத்துடனும் நீங்கள் கண்டிப்பாக தாய்நாடு திரும்பலாம்.

10. அமெரிக்காவை போல் இங்கு விமான நிலையங்களில் முஸ்லிம் பெயர் கொண்டவர்களையும், தாடி வைத்தவர்களையும் அவமதிக்கும்படி தனி சுங்க சோதனைகள் கிடையாது.

11. இந்து மத சின்னங்களை பெண்கள் வெளிப்படையாக அணிந்துக் கொள்ளலாம்.

12. ஆண்கள் வேலை நேரம் தவிர்த்து இந்துமத சின்னங்களான விபூதி, சந்தனம், குங்குமம், பூனுல் அணிந்துக் கொள்ளலாம்.

தௌ.மு.ஜகரிய்யா
(aahazack@yahoo.com)
 


0 comments

கருத்துரையிடுக