புதன், 29 ஜனவரி, 2014

பேரீச்சைபழம் ஜூஸ் செய்வது எப்படி?

அராபிய பாலைவனங்களில் பயிரிடப்பட்டுவரும் பேரீச்சை பழங்கள் மிகவும் சத்தானவை. உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அளிப்பவை. இது பிற பழங்களைவிட பலமடங்கு சுவையானது. இத்தகைய பழங்களை ஜூஸ் செய்து உட்கொள்ளும் போது அதிக சக்தியை எளிதாக பெற்றிட முடியும்.

தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் - 50 கிராம்
எலுமிச்சம் பழம் -  1
உப்பு - 1 சிட்டிகை
சீரகத்தூள் _ சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு

செய்முறை

1. பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைக்கவும்
2. இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்
3. எலும்பிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும்
4. பேரீச்சம் ஊறவைத்த தண்ணீரில் பழத்தையும், இஞ்சியையும் சேர்த்து அரைக்கவும்
5. பிறகு மீதியுள்ள பேரீச்சையை ஊறவைத்த தண்ணீருடன் , அரைத்த விழுதையும் வடிகட்டவும்
6. பின் எலுமிச்சை சாறு, உப்பு, சீரகத்தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கி பகிரவும்.

1 comments:

  1. பெயரில்லா30 மார்., 2022, PM 1:42:00

    பேரீச்சைபழம் ஜூஸ் செய்வது எப்படி? - குவைத் குயில் >>>>> Download Now

    >>>>> Download Full

    பேரீச்சைபழம் ஜூஸ் செய்வது எப்படி? - குவைத் குயில் >>>>> Download LINK

    >>>>> Download Now

    பேரீச்சைபழம் ஜூஸ் செய்வது எப்படி? - குவைத் குயில் >>>>> Download Full

    >>>>> Download LINK

    பதிலளிநீக்கு