ஞாயிறு, 26 ஜனவரி, 2014

குவைத் திரையரங்குகளும், தமிழ் திரைப்படங்களும்....

அல் ஹம்ரா கட்டிடத்தில் உள்ள
Grand cinemas
குவைத் நாட்டில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வேலைவாய்ப்பின் காரணமாக வசித்து வருகின்றனர். தங்களின் ஓய்வு நேரத்தை இன்பமாக மாற்ற திரையரங்குகளுக்கு வருகின்றனர்.

குவைத் நாட்டில் தமிழ் திரைப்படங்களுக்கு நெருக்கமான பார்வையாளர் வட்டம் இருப்பதால் அரபு மற்றும் ஆங்கில படங்களுக்கு இணையாக தமிழ் திரைப்படங்களும் வௌியிடப்படுகின்றன.


இங்குள்ள தமிழர்கள் திரைப்படங்களை விரும்பி பார்ப்பதால் புதிய படங்களும் உடனுக்குடன் வௌியிடப்படுகின்றன.

குவைத் நாட்டில் 14 இடங்களில் சுமார் 61 திரையரங்குகள் உள்ளன. Cinescape, grand cinemas மற்றும் IMAX போன்ற நிறுவனங்களே குவைத்தில் திரைப்படம் வௌியிடும் பிரத்யோக உரிமை பெற்றுள்ளன. இவற்றின் மொத்த இருக்கைகள் சுமார் 10,000 மாகும்.

சிற்றுண்டிகள், குளிர்பானங்கள்
போன்றவை விற்பதற்கான இடம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனிதனி இருக்கைகள் என நவீனமாக உலகதரத்தில் திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் டிக்கெட்கள் இணையதளங்களில் முன்பதிவு செய்யபடுகிறது.


பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் பர்வானியா மற்றும் பஹஹில் பகுதியில் உள்ள திரையரங்குகளிலேயே வௌியிடப்படுகின்றன.

மேலும் தமிழ் திரைப்படங்களின் வணிக வெற்றிக்கு குவைத் திரையரங்கள் ஒரு பரந்த சந்தையை உருவாக்கி தருவது மட்டுமில்லாமல், ஒரு நாள் முன்பாகவே புதிய படங்களை காண்பித்து விடுகின்றன.

0 comments

கருத்துரையிடுக