செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

குவைத் சுதந்திர தின வரலாறு

பிப்ரவரி 26ம் தேதி  குவைத் தனது 24வது சுதந்திர தினத்தைக் கொண்டாட  உள்ளது. அதன் பிண்ணனியை குவைத்தில் வசிக்கும் தமிழர்களும் அறிந்துக் கொள்வது அவசியம்.

1990ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி. ஈராக் அதிபரான சதாம் உசேனின் பாதுகாப்பு படை குவைத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஈராக்கிய படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றம் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவூதிஅரேபியாவின் ஒருசில பகுதிகளிலும் போர் நடந்தது.

குவைத் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து உடனடியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதார தடை விதித்தது.


அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்நாட்டுப் படைகளை சவூதிஅரேபியாவில் நிறுத்தி மற்ற நாடுகளும் தங்களது படைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனால் பல நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இணைந்தன. அவற்றில் சவூதி அரேபியா, இங்கிலாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகளே பெரும் பங்கு வகித்தன.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் 1991ம்  ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வரை ஈராக்கிற்கும், அமெரிக்கா தலைமையிலான  28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த இந்த சண்டை வளைகுடா போர் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த போரில் வான்வழித் தாக்குதல் 1991ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்றும் தொடர்ந்து தரைவழி தாக்குதல் பிப்ரவரி 23ம் தேதி அன்றும் தொடங்கியது.

குவைத்திலிருந்து ஈராக்கிய படைகளை விரட்டி அடித்த  கூட்டுபடையினர் ஈராக் நிலப் பகுதிக்குள் முன்னேறினர். தரைவழி தாக்குதல் தொடங்கிய 100 மணிநேரத்திற்குள் கூட்டுப் படையினர் வெற்றி பெற்று போரை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

ஈராக்கின் குவைத், சவூதி அரேபிய எல்லை பகுதியில் வான்வழி மற்றும் தரைபோர் நடவடிக்கைகள் தீவிரமாக நிகழ்ந்தது. இந்த போரின் முடிவில் ஈராக் மற்றும் குவைத் பெரும் அழிவுகளையும் உயிரிழைப்புகளையும் சந்தித்தது.

அமெரிக்க கூட்டுபடையில் இருந்த 956,600 பேர்களில் 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் அமெரிக்கர்கள். இந்த போரினால் சுமார் 35,000 பேர் கொல்லப்பட்டனர். 75,000ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

ஈராக்குக்கு எதிரான அமெரிக்க கூட்டுப் படையில்  குவைத்திற்கு ஆதரவாக சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய முஸ்லிம் நாடுகளும் பங்குகொண்டது.

மொத்தம் செலவான 60மில்லியன் அமெரிக்க டாலரில் 40 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சவூதி அரேபியா செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.magnumphotos.com/C.aspx?VP3=SearchResult&STID=2S5RYDIFQEB

1 comments:

  1. பெயரில்லா30 மார்., 2022, PM 1:42:00

    குவைத் சுதந்திர தின வரலாறு - குவைத் குயில் >>>>> Download Now

    >>>>> Download Full

    குவைத் சுதந்திர தின வரலாறு - குவைத் குயில் >>>>> Download LINK

    >>>>> Download Now

    குவைத் சுதந்திர தின வரலாறு - குவைத் குயில் >>>>> Download Full

    >>>>> Download LINK

    பதிலளிநீக்கு