புதன், 8 ஜனவரி, 2014

கசகசா வளைகுடா நாடுகளில் தடை ஏன்?


கசகசா என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் ஆயிரகணக்கான வருடங்கள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்ததும் கூட. பேதி நோய்க்கு  மருந்தாகவும் பயன்படுகிறது. 

உணவுகளில் மட்டன், சிக்கன் போன் அசைவ உணவுகளில் ருசிக்கூட்ட சேர்க்கப்படும் பொருளாகதவும் பயன்படுத்தப்படுகிறது.  உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதையும் உண்டு.
பாப்பி மலர்கள் அலங்காரத்துகாக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாப்பி செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பைமுற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவது தான் கசகசா.

ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது... அதாவது  விதைகள் முழுமை அடையாமல்  இருக்கும் போது, அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.

மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. 

இந்தியாவை பொருத்தவரை கசகசா போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ்வரவில்லை என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை, மற்றும் சுங்க இலக்கா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் தடைவிதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.

போதிய விழிப்புணர்வு இல்லாமல் அதையும் மீறி வளைகுடா பகுதிகளில் எடுத்துவந்தால் போதைப் பொருள் கடத்தி வந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படலாம். கசகசா மட்டுமின்றி நம் ஊரில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட அயிட்டம் தான்.

போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெறும் கேடு விளைவிக்கும். இதனால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என பலவகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுவதால் வளைகுடா பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

                                                             
                                                               தௌ.மு.ஜகரிய்யா
(aahazack@yahoo.com)