செவ்வாய், 7 ஜனவரி, 2014

பேரீச்சம் பழம் சூப் செய்வது எப்படி?

அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன.

அதனால் தான் முஸ்லிம்கள் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள்.

மேலும் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்த பேரீச்சையில்  சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பேரீச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2 கீற்று
புதினாஇலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி     - சிறிது

செய்முறை

வெள்ளரிக்காய், கேரட், பச்சை மிளகாய் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.