சனி, 4 ஜனவரி, 2014

மஜ்பூஸ் செய்வது எப்படி?


குவைத்தியர்கள் அன்றாட உண்ணும் உணவு வகைகளில் இந்த மஜ்பூஸ் சாதமும் ஒன்று. இது பொதுவாக அராபியர்களின் கலாச்சார உணவாக கருதப்படுகிறது.

இது சவுதியில் தான் மிகவும் பிரபலம். சவுதியில் கப்ஸா என்று தான் சொல்வார்கள். இந்த  கப்ஸா உணவின் பூர்வீகம் ஏமான் நாடு என கருதப்படுகிறது.

கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலும் மஜ்பூஸ் என்றே அழைக்கபடுகிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் புலாவ் சாதத்தினை போல் தான் இருக்கும்.

பொதுவாக அராபியர்கள் காரம் சாப்பிடமாட்டார்கள். எனவே இதில் காரம் குறைவாகவே காணப்படும்.

தமிழில் பொதுவாக கப்சா (பொய் வார்த்தை) உடாதடா என்பார்கள். ஆனால் குவைத்தில் கப்சா  செய்தே சாப்பிடலாம். சரி எப்படி என்று பார்போம்.....

தேவையான பொருட்கள்:
  • முழு கோழி – இரண்டு (அ) சிக்கன் லாலி பாப் 8 துண்டுகள்
  • அரிசி - அரை கிலோ (இரண்டறை ஆழாக்கு)
  • எண்ணை - 50 மில்லி (கால் டம்ளர்)
  • பட்டை ஒரு விரல் நீளம் -இரண்டு
  • ஏலம் - முன்று
  • கிராம்பு – நாலு
  • காய்ந்த பெரிய எலுமிச்சை
  • வெங்காயம் - முன்று
  •  இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை டேபுள் ஸ்பூன்
  •  பட்டர் - ஒரு தேக்கரண்டி
  •  உப்பு தேவைக்கு
செய்முறை:
  1. முழு கோழியை சுத்தம் செய்யவும்.
  2. அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
  3. அதில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்ணீர் 3 3/4   அளவு வறுகிறது. நான்கு டம்ளரக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேகவிடவும்.
  4. வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும் கோழியை தனியாகவும் வைக்கவும்.
  5. சட்டியை காயவைத்து அதில் எண்ணை பட்டரை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு மனம் வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.சிவக்க விட வேண்டாம்.
  6. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் (மாசாலா) போட்டு பச்ச வாடை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள கோழி வெந்த தண்ணீரை தாளித்த சட்டியில் அளந்து ஊற்றவும்.
  7. கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்து வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும்.
இது தான். அரேபியர்களின் மக்பூஸ் (கப்சா) சோறு. ஆனால் பேச்சுவழக்கில் மஜ்பூஸ் என்றே கூறப்படுகிறது.

1 comments:

  1. பெயரில்லா30 மார்., 2022, PM 1:42:00

    மஜ்பூஸ் செய்வது எப்படி? - குவைத் குயில் >>>>> Download Now

    >>>>> Download Full

    மஜ்பூஸ் செய்வது எப்படி? - குவைத் குயில் >>>>> Download LINK

    >>>>> Download Now

    மஜ்பூஸ் செய்வது எப்படி? - குவைத் குயில் >>>>> Download Full

    >>>>> Download LINK

    பதிலளிநீக்கு