ஞாயிறு, 5 ஜனவரி, 2014

குவைத்தின் உயரமான கட்டிடம் - அல் அம்ரா

குவைத்தில் உள்ள கட்டிடங்களில் மிகவும் உயரமானது அல் அம்ரா கட்டிடம் ஆகும். இது மத்திய கிழக்கு நாடுகளிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடமாகவும் கருதப்படுகிறது. 

2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டே நிறைவு பெற்றது. சுமார் இரண்டு லட்சத்து 98 ஆயிரத்து 963 சதுரஅடியில் அமைந்த இந்த கட்டிடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டது.

அஜய்ல் ரியல் எஸ்டேட்டுக்கு சொந்தமான இந்த கட்டிடம் குவைத் நகரத்தில் சர்க் என்ற இடத்தில் 11.11.2010 அன்று
திறக்கப்பட்டது.

இதன் உயரம் 412.6 மீட்டர்கள் ஆகும். அதாவது ஆயிரத்து 354 அடிகளாகும். 77 அடுக்குகளை கொண்ட இந்த அல் அம்ரா கட்டிடத்திற்கு ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவன பழுதூக்கிகள் (Lift) பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் வணிக வளாகங்கள், திரையரங்குள், அலுவலகங்கள் போன்றவை அமைந்துள்ளன.

0 comments

கருத்துரையிடுக