வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலை வாழவைத்த ஜெயலலிதா!

காதல் என்பது மொழி,இனம்,தேசம்,தகுதி இவைகளை கடந்தது என்பதற்கு கடந்த 2002 ம் வருடம் இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய காதல் ஜோடி ஒரு சான்று என கொள்ளலாம் .

தலால் ஆஸ்மி என்ற பெண் குவைத் நாட்டை சேர்ந்தவர். தாயை இழந்தவர். வாழ்கை வசதிகளுக்கு எந்த குறையுமில்லை.

அவரது அப்பாவின் மூன்றாவது மனைவியுடன் அவரும் அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இவரது அப்பா மகிழுந்து ஓட்டுனராக ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து காத(ல்)ர் பாஷா என்பவரை அழைத்து வருகிறார்.

காரில் பயணம். அந்தஸ்துகளையும் மீறி இருவருக்கும் காதல் அரும்பியது. ஆனால் குவைத் நாட்டின் சட்டத்திட்டங்கள், தங்களை வாழ்வில் இணைத்து வைக்காது என்பதை உணர்ந்த இருவரும், போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவுக்கு தப்பிவிட திட்டம் போட்டனர்.

இதில் பாதி கிணறை தாண்டிவிட்ட இவர்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டனர்.

தலால் ஆஸ்மியிடம் இருப்பது போலி கடவுசீட்டு என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவரை மட்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைத்து வைத்தனர்.

அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆஸ்மிக்கு சிகிச்சை அளிக்கப்பட, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. அவரை குவைத்துக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இந்திய அரசை குவைத் அரசு கேட்கிறது.

தன்னை தன் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ, தன் வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தையை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் ஆஸ்மியை தொற்றிக் கொண்டது.

"என்னை என் நாட்டிற்கு அனுப்பிவீடாதீர்கள், என்னை கொன்று விடுவார்கள்" என்கிறார்.

இந்த செய்தி நாளிதழ்களில் வெளியானது மட்டுமில்லாமல் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை குரல் கொடுக்கவே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு கருணை அடிப்படையில் பிணையில் விடுதலை பெற செய்தார்.

அப்போது குவைத் தூதரக அதிகாரி தலால் ஆஸ்மியின் வழக்கறிஞரைக் கூடபார்க்க தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

பின்னர் காதல் ஜோடிகளை அழைத்து, முதல்வர் ஜெயலலிதா பரிசு பொருட்களை வழங்கி உபசரித்தார்.

பிறகு தலால் ஆஸ்மி காதலனுடன் வாழ ஆந்திராவில் உள்ள கடப்பா சென்றுவிட்டார். இவர்களை அப்போது ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவும் அழைத்து சில உதவிகளை செய்தார்.

இந்தியரை நம்பிவந்த குவைத் பெண்ணுக்கு சிறப்பாக வாழ இந்தியாவில் பெருமளவு உதவி கிடைத்தது.

ஆந்திர அரசு காதருக்கு அரசு வேலை கொடுத்தது. தலால் ஆஸ்மிக்கு ஒரு தனியார் பள்ளிக்கு வேலை வழங்க சொல்லி சிபாரிசு செய்தது.

தற்போது அவர்களுக்கு காதலின் சின்னமாக இப்றாஹிம் என்கிற மகன் உள்ளான்.♥

கடந்த 2007ம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம்
தௌ.மு.ஜகரிய்யா
(aahazack@gmail.com)

0 comments

கருத்துரையிடுக