வெள்ளி, 3 ஜனவரி, 2014

புலம் பெயர்தல்

சின்னப்பூ
போட்ட
சிங்கப்பூர் சேலை
சிறந்ததாகபட்டது தங்கைக்கு....

கடன்பட்டு வாங்கி வந்த
லேப்டாப்பும, புதுமாடல் செல்போனும்
தேடலுக்கு தேவையாய்பட்டது தம்பிக்கு.....

கோடாலி தைலமும், மீசைகாரத் தைலமும்

அம்மாவின் மூட்டுவலிக்கு போதுமானதாயிருந்தது....

துருக்கி தொப்பி, மல்லிகை அத்தர்,
வெள்ளை கைலியும் மனநிறைவைத்
தந்தது அத்தாவிற்கு....

பால் மிட்டாயும், சுவிங்க பெட்டியும்
விளையாட்டு பொருட்களும்
குழந்தைக்கு குதூகலத்தை தந்தது...

மூன்றாண்டுகள் முடிந்து முழுதாய்
வந்ததில் முழு திருப்தி இல்லதரசிக்கு....

வீடெங்கும் வீசுகின்ற பிரியாணி வாசமும்
உறவுகளின் நேசமும்,
உள்மனத்தின் ரணத்திற்கு களிம்பாகியது...

தொலைபேசியிலேயே
குடும்பம் நடத்திய எனக்கு
தற்காலிகமாய் வற்றிபோனது
புலம்பெயர்தலின் வலி.

(இ.தாஹிர் பாஷா)

இவரது மற்ற படைப்புகள்:
  1. நேசம்


0 comments

கருத்துரையிடுக