வியாழன், 2 ஜனவரி, 2014

தூதரக பணிகளை விரைவாக முடிக்க சில ஆலோசனைகள்....

குவைத்தில் பணிபுரியும் இந்தியர்கள்  திருமண பதிவு, இறப்பு பதிவு, பாஸ்போர்ட் புதிப்பிக்கவோ அல்லது துளைந்து போனாலே இன்னும் வேறுசில விசயங்களுக்காக இந்திய தூதரகம் செல்ல வேண்டும்.

பொதுவாகவே குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் எந்நேரமும் பரபரப்பாகவும், கூட்டமாகவும் காணப்படும். நாம் சாதரண வேலையாக சென்றாலும் அதுவும் காலையிலேயே சென்றாலும் அரைநாள் போய்விடும்.

எனவே நாம் ஒருசில முன்தயாரிப்புகளோடு சென்றால் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமில்லாமல் விரைவாகவும் வேலைகளை முடிக்கலாம்.

* தூதரகம் செல்லும் முன் பாஸ்போர்ட், சிவில் ஐடி போன்றவற்றை முன்கூட்டியே  நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
( நகல் எடுக்க போதுமான வசதிகள் தூதரகத்தில் குறைவு. தூதரகத்தை சுற்றியும் வேறு நகலகங்கள் இல்லை )

* அடுத்ததாக விண்ணப்ப படிவங்கள் வாங்க வேண்டும். காலையில் ஏழு அரை மணிக்குதான் தூதரகம் திறக்கப்படுகிறது. ஆனால் நம்மவர்கள் ஆறு மணியில் இருந்து வரிசையில் காத்திருப்பார்கள். இதிலே நமக்கு அரைமணிநேரம் செலவாகிவிடும்.  இதை தவிர்க்க....

தூதரக இணையதளத்தில் அனைத்து விண்ணப்பங்களும் கிடைக்கின்றன. 

* தூதரகம் செல்லும் முன்னே விண்ணப்பதை பூர்த்தி செய்து எடுத்துச் சென்றால் ஒருமணி நேரம் மிச்சம் செய்யலாம்.

(தூதரகம் திறந்தவுடன் அனைவரும் விண்ணப்பம் படிவம் வாங்க வரிசையில் நிற்க, நீங்களோ பூர்த்தி செய்த படிவத்துடன் செல்வதால் டோக்கன் வாங்கி நேராக கவுண்டர் செல்லலாம்.)

மறக்காமல் பேனா எடுத்து செல்லவும். பொதுவாக விண்ணப்பிப்பது காலை பொழுதிலும், விநியோகம் செய்வது மாலை பொழுதிலும் தான். எனவே அவர்கள் ஒரு தேதி கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னால் நாம் மாலை பொழுதில் தான் செல்ல வேண்டும்.

தௌ.மு.ஜகரிய்யா
aahazack@gmail.com

0 comments

கருத்துரையிடுக