ஞாயிறு, 23 நவம்பர், 2014

குவைத் குளிருவது ஏன்?

அரேபிய பாலைவனத்தின் ஒருபகுதி தான் குவைத்தில் உள்ள பாலைவனம். இது முழுவதும் மணல் பரப்பாக இல்லாமல் சரளைகள் மற்றும் மணல் கற்களால் ஆனது.

பதினேழாயிரத்து எண்ணூற்று பதினெட்டு (17,818) சதுரகிலோ மீட்டர்கள் உள்ள குவைத்தில் சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு குறைந்த அளவாக 70 முதல் 150 மில்லிமீட்டர்கள் தான் மழை பொழிவை பெறுகிறது. இதனால் நாடு மிகவும் வறட்சியாக காணப்படுகிறது.

கோடை காலங்களில் 130 டிகிரி பாரன்ஹைட் வரை வெப்பநிலை கடுமையானதாக இருக்கும். நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்
இவற்றிற்கு நேர் மாறாக ஒரு குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இங்கு இரவு நேரங்களில் கடுங்குளிர் வாட்டி எடுப்பதை பார்த்தால் நிறையப் பேர் நடுங்கி போவார்கள். இதற்கு காரணம் உண்டு.

பகலில் அடித்த வெயிலின் வெப்பத்தை காற்றினால் இருத்தி வைத்துக்கொள்ள முடிவதில்லை. தவிர, பாலைவன மணல் விரைவில் வெப்பத்தை இழந்துவிடுகிறது. பாலைவனங்களில் வானில் அனேகமாக மேகங்கள் இருக்காது என்பதால் தரையிலிருந்து வெப்பம் எளிதில் உயரே சென்றுவிடுகிறது. இதனால் குளிர்காலங்களில் குவைத்தில்  -6டிகிரி    பாரன்ஹைட் வரை குளிர் நிலவுகிறது.

சில சமயங்களில்  ஊசி குத்துவது போலவும் குளிர்வாட்டி வதைக்கும்.

0 comments

கருத்துரையிடுக