சனி, 15 ஜூன், 2019

குவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு : இதுதான் அதிகபட்ச வெப்பநிலையா? – என்ன சொல்கிறது சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பு

வளைகுடா நாடான குவைத்தில் கடந்த ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை 63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் உலகின் அதிகபட்ச வெப்பநிலை என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. இதை ஆய்விற்கு பிறகே, உலகின் அதிகபட்ச வெப்பநிலையா என்பதை சொல்லமுடியும் என்று சர்வதேச வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வேதச வானிலை ஆராய்ச்சி மையம், உலகின் அதிகபட்ச வெப்பநிலை எங்கு, எப்போது, எந்த ஆண்டு பதிவானது உள்ளிட்ட தகவல்களை ஒருங்கிணைத்து வருகிறது. அதன்படி, 1913ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பர்னாஸ் கிரீக் ராஞ்ச் பள்ளத்தாக்கில் 56.7 டிகிரி வெப்பநிலை பதினானதே, உலகின் அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.

இந்நிலையில், குவைத்தில், கடந்த 8ம் தேதி 63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், இதுதான் உலகின் அதிகபட்ச வெப்பநிலை என்று கல்ப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

 மற்றொரு முன்னணி நாளிதழான அல் கபாஸ் பத்திரிகையோ,. சவுதி அரேபியாவின் அல் மஜ்மாவில் 55 டிகிரி வெப்பநிலை பதிவானதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த 63 டிகிரி செல்சியஸ் மற்றும் 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு தொடர்பாக உரிய விசாரணை நடத்திய பிறகு, இதுகுறித்த உண்மைத்தகவல் வெளியிடப்படும் என்று சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் 2016ம் ஆண்டு மே 19ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பலோடி பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதே நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

கருத்துரையிடுக