ஞாயிறு, 5 ஜனவரி, 2014

குவைத் உதுமான் மியூசியம்


குவைத் நாட்டில் உள்ள ஹவல்லி பகுதியில் அல் உதுமான் வீட்டு அருங்காட்சியகம் உள்ளது. இது மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான அருங்காட்சியகம் ஆகும். இங்கு ஒரே இடத்தில் பல்வேறு விதமான அருங்காட்சியகங்கள் அமைந்ததுள்ளது இதன் சிறப்பாகும்.

அருங்காட்சியத்தின் எதிரே அமைந்துள்ள கார் நிறுத்துமிடத்தில், திறந்த வெளியில் கார் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அருங்காட்சியத்தின் உள்ளே குவைத்தின் வீட்டு பொருட்கள் அருங்காட்சியகம். கப்பல் துறை, இராணுவத்துறை, சினிமா துறை போன்ற பல்வேறு அருங்காட்சியகங்கள் உள்ளன.

தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த பொருட்களை சேகரித்து  பாதுகாத்து பார்வைக்கு வைத்துள்ளனர். பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பல மதிப்பு மிக்க அரேபிய நாகரிக மனிதர்களின் பயன்படுத்திய பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய உடை, வாள் போன்றவை வியப்படைய வைக்கின்றன.

உலகின் பெரிய குரான், கையால் எழுதப்பட்ட குரான் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குவைத்தியர்களின் கலாச்சாரத்தை அரிய பாரம்பரிய கலை கூடம். குவைத்தியர் கலந்துரையாடும் திவானியா, குவைத்தியர்களின் மனமகள் அறை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குவைத் ஒரு இஸ்லாமிய நாடு ஆகையால் மன்னர்கள் வரலாறு அவர்களின் வர்த்தக முறை போன்றவற்றை அறிந்துவரலாம்.  பெரியவர் முதல்  சிறியவர் வரை மனமகிழ்ச்சியுடன் கண்டு வரலாம்.  இதில் பல்வேறு பொருட்கள் தொட அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சில பொருட்களை தொட்டு புகைப்படமும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

காலை 9மணியிலிருந்து மதியம் 12 அரை  மணி வரையிலும், மாலை 4:30 மணியிலிருந்து இரவு 9 மணிவரையிலும் பார்வையாளர்களை பார்க்க அனுமதிக்படுகிறது. இதற்கு கட்டணமாக ஒரு தினார் வசூலித்தாலும் குவைத்தின் பாரம்பரியத்தை அறிந்துவரலாம்.

சரி யார் இந்த அப்துல் லத்தீப் உதுமான்?

அப்துல்லா அப்துல் லத்தீப் அல் உதுமான் (1895 - 1965) கால பகுதியில் குவைத்தில் வாழ்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார்.

ஆசிரியர் மற்றும் பெரிய வள்ளல் என கருதப்பட்டார்.  ஏழைகளுக்கு உதவக்கூடிய சிறந்த பண்பாளர். 1930களில் இவரும் இவருடைய சகோதரரும் சேர்ந்து பள்ளி ஒன்றை ஆரம்பம் செய்கின்றனர். நாளடைவில் இந்த பள்ளி உள்ள தெரு இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. (அல் உதுமான் தெரு) அதே தெருவில் அவர் பெயரால் 1958 ல் கட்டப்பட்ட ஒரு மசூதியும் உள்ளது.

இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் முல்லா உதுமான்  அல் உதுமான் குவைத்தில் மிகசிறந்த அறிஞராக இருந்தார்.

காட்சியகம்:


























0 comments

கருத்துரையிடுக