திங்கள், 10 நவம்பர், 2014

தற்போதைய குவைத் மன்னர் வகித்த பதவிகள் என்னென்ன தெரியுமா?

தற்போது உலகில் மன்னராட்சி நடைபெறும் 44 நாடுகளில் குவைத் நாடும் ஒன்று. இந்நாட்டின் மன்னராக சபா அல் அஹமது அல் ஜாபர் அல்சபா உள்ளார். அமீர் என அழைக்கப்படும் இவரே அரசின்
தலைவர் மற்றும் ஆட்சியாளர்.

 தற்போது 86 வயதாகும் மன்னர் 1929ஆம் ஆண்டு ஜூன் 16ம் தேதி பிறந்தார். 2006ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் 29ம் தேதி குவைத்தின் அமீராக (மன்னர்) அறிவிக்கப்பட்டார்.

அதற்கு முன் அவர் பல்வேறு பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்து வந்தார்.
  • 1954 களில் மத்திய நகராட்சி குழுவின் உறுப்பினராகவும், கட்டிடம் மற்றும் கட்டுமான சபையின் உறுப்பினராக இருந்தார்.
  • 1955ஆம் ஆண்டில் சமூக விவகாரம் மற்றும் தொழிற் அதிகார சபையின் தலைவராகவும் இருந்தார். மேலும் இதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 9ம் தேதியில் இருந்து 1962ம் ஆண்டு ஜனவரி மாதம்  17ம் தேதி வரை அச்சகத்துறை மற்றும் பிரசூரித்தல் துறையின் தலைவராகவும் இருந்தார்.
  • சுதந்திரத்திற்கு பிறகு1962ம் ஆண்டு இந்நாட்டின் முதல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரானார்.
  • 1963ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சரானார். அதன் பிறகு 2003ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி வரை தொடர்ந்து 40 ஆண்டுகள் உலகின் நீண்டகாலம் வெளியுறவுத் துறை அமைச்சராகவே இருந்து சாதனை படைத்தார்.
  • 1971ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 2ம் தேதி முதல் 1975ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி காலகட்டங்களில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், கூடுதலாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
  • 1978ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி நாட்டின் துணை பிரதமரானார். மேலும் கூடுதலாக வெளியுறவுத் துறையையும் கவனித்து வந்தார்.
  • 1981ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் 1982ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரையிலான காலகட்டங்களில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், கூடுதலாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
  • 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி துணை பிரதமராகவும் கூடுதலாக வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
  • 1992ம் ஆண்டு  அக்டோபர் மாதம் 18ம் தேதி முதல்நிலை பிரதமரானார்.
  • 1996ம் ஆண்டு அப்போதைய இளவரசர் ஷேக் சாத் அல் அப்துல்லா அல் சலீம் அல் சபா தலைமையில் திட்டமிடல் குழுவின் உறுப்பிராக இருந்தார்.
  • 2003ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதியில் இருந்து 2006ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி வரையிலான காலகட்டங்களில் அப்போதைய மன்னரின் ஆணைப்படி மீண்டும் இந்நாட்டின் முதல்நிலை பிரதமரானார்.
  • 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குவைத்தின் அமீராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை மிகவும் சிறப்பாக பொறுப்பு வகித்து வருகிறார்.

0 comments

கருத்துரையிடுக