செவ்வாய், 11 நவம்பர், 2014

காலங்கள்: அரபு மொழியில் பேசணுமா?_2

காலம் என்பது நிமிடம், நாள், ஆண்டு, என்பவற்றை குறிக்க பயன்படும் ஒரு அலகுமுறை ஆகும். காலம் என்பதை அரபுமொழியில் வஃக்த் என்று அழைக்கப்படுகிறது.

நொடி           -        தகீக
மணிநேரம்-        ஸா
இன்று         -        அல்யௌம்
காலை         -        சுபஹ்
நண்பகல்   -        லுஹர்
இரவு            -        பில்லைல்
நேற்று         -        அம்ஸ்
நாளை        -        புக்ர(அ) பாச்சர்
வாரம்          -       உஸ்பு
தினசரி       -       குல்லுயௌம்
மாதம்          -       ஷஹ்ர்
ஆண்டு       -       ஸந 

இவ்வாறு காலங்கள் பற்றிய சொற்களை அரபு மொழியில் பேசப்படுகிறது.

சரி அடுத்து அராபிய மாதங்கள் மற்றும் ஆண்டுகளை பற்றி பார்போம். தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களை போன்று இஸ்லாமிய மாதங்களும் பன்னிரென்டு தான். இஸ்லாமிய நாளேடு சந்திரனை அடிப்படையாக கொண்டது. 

இது ஆங்கில நாட்காட்டியைவிட 11 நாட்கள் குறைவானது. இதனால் தான் முஸ்லிம்களின் பண்டிகைகள் வெவ்வேறு காலங்களில் மாறிமாறி வருகிறது. எடுத்துக்காட்டாக ரமலான் பண்டிகை வெயில் காலத்திலும் வரும் மழைக்காலத்திலும் வரும்.

இந்த இஸ்லாமிய நாள்காட்டி முறையை கி.பி 683 வது வருடம் முஸ்லிம்களின் இரண்டாவது கலிபாவான உமர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை

1. முஹர்ரம்
2. ஸபர்
3. ரபியுல் அவ்வல்
4. ரபியுல் ஆஹிர்
5.ஜமாத்திலவ்வல்
6. ஜமாத்திலாஹிர்
7.ரஜப்
8. ஷஃபான்
9. ரமலான்
10. ஷவ்வால்
11. துல்காயிதா
12. துல்ஹஜ்

(தொடரும்...)

- ரோஜா பூ, எழுத்தாக்கம்: தினார் தமிழன் aahazack@yahoo.com

0 comments

கருத்துரையிடுக