ஞாயிறு, 19 அக்டோபர், 2014

குவைத் நாட்டினருக்கு புதிய விசா நடைமுறை : குவைத் இந்திய தூதரகம் அறிவிப்பு


அரபு நாடுகளில் ஒன்றான,குவைத் நாட்டினர்இந்தியா வருவதற்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 30 சதவீதம் பேருக்கு கூடுதலாக
விசா வழங்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வசிக்கும் ஏராளமானோர், சுற்றுலா, கல்வி, மருத்துவச் சிகிச்சைகளுக்காக இந்தியா வருவது அதிகரித்துள்ளது. 

இதனால், அவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை அங்குள்ள இந்திய தூதரகம் எளிதாக்கியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு, குவைத் நாட்டைச் சேர்ந்த, 7,600 பேருக்கு மட்டுமே இந்தியா வருவதற்கான விசா வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை, 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 'இந்தியா செல்ல விரும்பும் எவரும், தகுந்த ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தை அணுகினால், உடனே விசா வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என, குவைத்திலுள்ள, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

கல்வி, சுற்றுலா, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படும் விசா மூலம், குறிப்பிட்ட காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா சென்று வர
அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும் என, இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments

கருத்துரையிடுக