சனி, 10 ஜனவரி, 2015

குவைத்தில் ஆவணப்படம் வெளியீடு- படங்கள் இணைப்பு

 இந்தியாவில் பெரும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத் என கண்ணியமாக அழைக்கப்படும்  முகமது இஸ்மாயில் சாயிப் அவர்களின்  வாழ்வை சித்தரிக்கும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. காயிதே மில்லத் என்றால் உருது மொழியில்  வழிகாட்டும் தலைவர் என்று அர்த்தம்.

கடந்த ஜனவரி 8ம் தேதி குவைத் ரவ்தா பகுதியில் உள்ள அல் இஹ்லாஸ் அரங்கில் நடைப்பெற்ற இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவை குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது.


சுமார்  15 லட்சம் செலவில் தயாரான குறுந்தகடை இப்படத்தின் இயக்குனர்
ஆளுர் ஷா.நாவஸ் அவர்கள் வெளியிட இச்சங்கத்தின் தலைவர் முகமது மீராஷாப் பெற்றுக் கொண்டார். தமிழகத்தில் இயங்கிவரும் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்ததைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர்களில்  ஆளுர்  ஷா.நாவாஸூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments

கருத்துரையிடுக