செவ்வாய், 2 ஜூன், 2020

குவைத்தில் அபராதம் செலுத்தினாலும் இவர்களால் விசா புதுப்பிக்க முடியாது.!

குவைத்தில் தங்கி இருப்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டினர் அபராதம் செலுத்தினாலும் அவர்களின் வதிவிட விசாக்களை புதுப்பிக்க முடியாது என உள்துறை மற்றும் சமூக விவகார துறை தெரிவித்துள்ளது. 

இவர்களால் செலுத்த வேண்டிய அபராதம் தொகை 72 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனவர்கள் அரசு வழங்கிய பொது மன்னிப்பை புறக்கணித்தும் பல ஆண்டுகளாக குவைத்தில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் அரசு வழங்கிய பொது மன்னிப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள தவறியவர்களும் இதில் அடங்குவர்.

அரசின் பார்வையில் இவர்கள் சட்ட விரோதமாக தலைமறைவாக இருப்பவர்கள்.  இவர்களை நாடுகடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.

இப்படி சட்ட விரோதமாக 15க்கும் மேற்பட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் சட்ட விரோத மீறல்களுடன்
இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர்.

அதற்கடுத்தபடியாக 25 ஆயிரம் பங்களாதேஷ் நாட்டவர்கள், 20 ஆயிரம் எகிப்தியர்கள், 12 ஆயிரம் இலங்கையர்கள், 10 ஆயிரம் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், 9 ஆயிரம் சிரியா நாட்டவர்கள், 8 ஆயிரம் எத்தியோப்பியர்கள், தலா 4 ஆயிரம் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியர்கள் உள்ளனர்.  மீதமுள்ளவர்கள் பிற நாட்டவர்கள்.

இவர்கள் விதிமீறல் காலத்தை கடந்த பிறகு அதிகபட்சமாக 600 தினார்கள் செலுத்த வேண்டும். இவர்கள் இந்த அபராத தொகையை செலுத்த முன்வந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. எவ்வாறாயினும் இவர்கள் நாடுகடத்தப்படுவது உறுதி. #kuwait_kuyil

இவர்களில் பயண தடை அல்லது நீதித்துறையில் நிலுவையில் உள்ள வழக்கு போன்ற பிற கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்ட மீறலில் உள்ள 15 ஆயிரம் பேர் தங்களின் வதிவிட விசாக்களை புதுப்பித்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: அரபு டைம்ஸ்

http://www.arabtimesonline.com/news/120000-residence-violators-placed-on-blacklist-will-not-be-able-to-renew-residency-fines-unaccepted/

0 comments

கருத்துரையிடுக