செவ்வாய், 2 ஜூன், 2020

குவைத்தில் புழக்கத்தில் இருந்த இந்திய ரூபாய் தாள்கள்.!

குவைத் நாட்டில் தினாருக்கு முன்பு இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம், நம்பிதான் ஆக வேண்டும். 20ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இந்திய ரூபாயை ரிசர்வ் வங்கி வாயிலாக அச்சிட்டு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வந்தன.

இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து இந்திய ரூபாயை வாங்கி பயன்படுத்தி வந்த குவைத் 1961ம் ஆண்டு தினாரை அறிமுகப்படுத்திக் கொண்டது. பிறகு பஹ்ரைன் 1965ம் ஆண்டு தினாரை அறிமுகம் செய்தது.

1966 வரை இந்திய ரூபாயை பயன்படுத்தி வந்த கத்தாரும் அதன்பிறகு திர்ஹம்ஸை பயன்படுத்த ஆரம்பித்தது. பின்னர் ஓமான் 1970 ம் ஆண்டு ரியாலை அறிமுகம் செய்து ரூபாய் புழக்கத்திலிருந்து விலகியது.

1 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் சிவப்பு நிறத்திலும், 5 ரூபாய் நோட்டுகள் ஆரஞ்சு நிறத்திலும், 100 ரூபாய் நோட்டுகள் பச்சை நிறத்திலும் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இந்திய ரூபாய்கள் அனைத்தும் Z சீரிஸ் வகைகளாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்றும் இந்த ரூபாய் தாள்கள் உத்மான் வீட்டு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் குவைத் ஹவல்லி பகுதியில் உள்ள உதுமான் சாலையில் உள்ளது.

வாய்ப்புடையோர் சென்று பார்க்கலாம்.

இந்த அருங்காட்சியகம் பற்றிய கூடுதல் விவரம் அறிய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்







0 comments

கருத்துரையிடுக